/ கட்டுரைகள் / பிரபலமானவர்களின் விலாசங்கள்
பிரபலமானவர்களின் விலாசங்கள்
தமிழகத்தில், பிற மாநிலங்களில், வெளிநாடுகளில் வாழும் பிரபலமானவர்களை எளிதில் தொடர்பு கொள்ள உதவியாக தயாரிக்கப்பட்டுள்ள முகவரி தொகுப்பு நுால். எழுத்தாளர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., – எம்.பி., மற்றும் அரசியல் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரின் முழு முகவரியுடன் அமைந்து உள்ளது.முகவரி மட்டுமின்றி மின்னஞ்சல், அலைபேசி, தொலைபேசி எண் விபரமும் தரப்பட்டுள்ளது. துறை சார்ந்த பிரபலங்களை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில், 50 தலைப்புகளில் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளது. உயர் பதவி மற்றும் அந்தஸ்தில் இருக்கும் முக்கியஸ்தர்களை, எளிதாக தொடர்பு கொள்ள வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நுால்.– ஒளி