/ வாழ்க்கை வரலாறு / புரட்சித்தலைவி ஜெ! ஜெ! வாழ்க்கை வரலாறு

₹ 185

அரசியலில் மாறுபாடு கொண்டவர்கள் கூட, ஜெ.ஜெயலலிதாவின் மன உறுதியையும் ஆளுமையையும் பாராட்டவே செய்வர்.இந்நுால் ஜெயலலிதாவின் வாழ்க்கை,- திரைப்படம்-, அரசியல் ஆகிய மூன்றும் சேர்ந்த வரலாறுகளைக் கூறுகிறது.இந்நுாலில் ஜெயலலிதா குறித்த, 112 சிறிய கட்டுரைகள் உள்ளன. அவரின் நலத்திட்டங்களைப் பட்டியலிடுவதும், (பக் 14). ஜெ அவர்களின் அரசியல் பயணத்தை விளக்குவதும் (பக்.15). (பக்கம் 33), எம்.ஜி.ஆருடன் திரைப்படங்களில் நடித்து முன்னேற்றம் கண்ட வரலாறும் (பக். 79), ஸ்ரீரங்கத்தில் இவர் உடலை எரிக்காத தன் காரணமும் (பக்.199), இறுதி அஞ்சலி குறித்த விபரங்களும்(பக்220), உள்ளன.ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும் என்ற எண்ணம், துக்ளக் ஆசிரியர் சோவிற்கு இருந்தது என்ற குறிப்பும் (பக். 231), உள்ளது.நுாலில் உள்ள பிரமுகர்கள் கட்டுரைகள் சரியான முறையில் தொகுக்கப்படாமல், வந்த செய்திகளே மீண்டும் சில இடங்களில் வருவது, கூறியது கூறல் என்ற குற்றமாகிறது.–பேரா.டாக்டர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை