/ மாணவருக்காக / புவனேஷும் நானும்...

₹ 120

பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடனான அனுபவத்தை நெகிழ்வுடன் சித்தரிக்கும் நுால். கற்பித்தலில் புதிய நடைமுறைகளை வகுக்க உதவும் வகையில் கருத்துகள் அமைந்துள்ளன. வகுப்பறையில் மாணவர்களிடம் கற்ற இயல்பான விஷயங்களின் சிறப்பை மையப்படுத்தியுள்ளது. அவை, 25 தலைப்புகளில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் பள்ளியில் வகுப்பறை சூழலை படம் பிடிக்கின்றன. ஆசிரியர்களின் செயல்பாட்டில் ஏற்க வேண்டிய மாற்றங்களை புத்தகம் வெளிப்படுத்துகிறது. ஒரு வகுப்பறையில், ‘மாணவருக்கு புதிதாக எதையும் கற்பிக்க முடியாது. ஒவ்வொருவரிடமும் என்னவிதமான ஆற்றல் மறைந்திருக்கிறது என்பதை மட்டும் கண்டுபிடிக்க முடியும். அதை திறம்பட வளர்ப்பது தான் ஆசிரியரின் பணி’ என அனுபவம் வாயிலாக வெளிப்படுத்தும் அற்புத நுால். – ராம்


சமீபத்திய செய்தி