/ ஆன்மிகம் / ராமன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் (மூன்று பாகங்கள்)

₹ 600

ராமன் வரலாற்றை, பால காண்டம் முதல் யுத்த காண்டம் வரை உள்ள நிகழ்ச்சிகளை விவரிக்கும் நுால். ஒவ்வொரு காண்டத்திலும், நிகழ்ச்சிகளை நிரலாக பேசுகிறது. மூன்று புத்தகங்களாக அமைந்து உள்ளது. வால்மீகி ராமாயணத்தை முதன்மையாகக் கொண்டே படைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே, கம்பராமாயணத்திலிருந்து பாடல், நிகழ்ச்சிகளை விளக்கிச் சொல்லியிருப்பது அருமை. கவுசிக முனிவருடன் ராமன், லட்சுமணன் நடைபயணத்தில் சென்றனர். கங்கையும், சரயு நதியும் சேருமிடத்தில் இருந்த ஆசிரமத்தைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார் ராமர். இரண்டாம் தொகுதியில், ஆரண்ய, கிஷ்கிந்தா காண்டங்கள் இடம் பெற்றுள்ளன. விராதனின் விமோசனம் தொடங்கி, சுக்ரீவனைத் தேடுவதான நிகழ்வு வரை விளக்குகிறது. ராம – ராவண யுத்தம் நிகழ்வதற்கு அடித்தளம் ஆரண்ய காண்டத்தில் அமைந்துள்ளது. மூன்றாம் தொகுதியில், சுந்தர, யுத்த காண்டங்கள் இடம் பெறுகின்றன. ராம – ராவண யுத்தம், ராவணனின் வீழ்ச்சி, சீதையின் மீட்சி ஆகியவை, விரிவாக இடம் பெற்றுள்ளன. ராமாயணத்தை நேரே நின்று பேசுவது போல தந்திருக்கிறார். பாலும் தேனும் கலந்தது போல, கம்பரின் கவிதைகளும், வால்மீகியின் வாசகங்களும் பின்னிப் பிணைந்து இழையோடுகின்றன.– பேராசிரியர் இரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை