/ கதைகள் / ரசூலின் மனைவியாகிய நான்...

₹ 180

மும்பை குண்டு வெடிப்பை மையப் படுத்தி படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். சிறுகதையாக துவங்கி நாவலாக விவரிக்கப்பட்டுள்ளது. சிறுகதையில் வரும் கதாபாத்திரமான ரசூலுக்கு பின் கவுரியின் வாழ்க்கையை விரிவு படுத்தி எழுதப்பட்டுள்ளது. நாவலின் மையம் மும்பை குண்டு வெடிப்பு. பங்குச் சந்தையில், பேருந்தில், மருத்துவமனைகளில், ஹோட்டல்களில் குண்டுகள் வெடிக்கின்றன. ஏன் வெடிக்கின்றன? இவற்றுக்கு யார் காரணம் என்பது ஒருபுறம்... பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் வலி, வேதனை, காயங்கள் யாவும் அருகில் இருந்து கண்டது போன்ற பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தண்டவாளத்தில் சக்கரங்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. மும்பை இயங்கிக் கொண்டே இருக்கிறது. மறக்க முடியாத நினைவை தரும் நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை