/ வரலாறு / ஈழ மன்னர் குளக்கோட்டனின் சமய, சமுதாயப் பணிகள்

₹ 50

இலங்கையில் குளக்கோட்டன் ஆட்சி காலத்தை தக்க சான்றுகளுடன் ஆய்வுபூர்வமாக அலசும் நுால். குளக்கோட்டன் ஆட்சி பற்றி மகா வம்சம் என்ற நுால் சொல்கிறது. திருகோணமலையில் கோவில் பணிகளை குறிப்பிடுகிறது. இதற்கு இந்திய பணியாளரை அழைத்து வந்தது, நிவந்தம் அளித்தது, குளம் வெட்டியது போன்ற தகவல்கள் வியப்பூட்டுகின்றன. திருகோணமலையில் கோணேசர் கோவில் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் திருகோண மலையை பாடியுள்ளதையும், கடல் கோளால் இலங்கை பாதிக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. இலங்கை மன்னர் குளக்கோட்டனின் சமய சமூகப் பணிகளை ஆய்வு செய்து தகவல் தரும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை