/ வாழ்க்கை வரலாறு / ரைட் சகோதரர்கள்
ரைட் சகோதரர்கள்
விமானத்தை கண்டுபிடித்த அறிஞர்களின் சாதனை வாழ்வை விவரிக்கும் நுால். விஞ்ஞானம் மக்களுக்கு எத்தகைய பயனைத் தருகிறது என்றும் விளக்குகிறது. சைக்கிள் கடை நடத்தி வந்த சகோதரர்கள், அயராத முயற்சியால் வானில் பறக்கும் விமானம் உருவானதை கதை போல் விவரிக்கிறது இந்த புத்தகம். முயற்சியை செயல்படுத்த எடுத்த நடவடிக்கைகள், பின்னடைவு களில் பாடம் கற்று முன்னேறியதை தெளிவாக தருகிறது. மனிதனும் வானில் பறக்க முடியும் என்ற நீண்டகால கனவு எவ்வாறு நனவாக்கப்பட்ட வழிமுறை சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலக மக்கள் அடைந்து வரும் நன்மை பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பனையாக இருந்ததை அறிவியல் வழியாக விடாமுயற்சியுடன், சாதனையாக்கியதை கூறும் நுால். – ராம்