/ கவிதைகள் / சகுனிகள் தோற்பதில்லை
சகுனிகள் தோற்பதில்லை
யதார்த்த வாழ்வை விவரிக்கும் கவிதை தொகுப்புகளின் நுால். கவிதைகள், 48 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை. கருத்துக்களும், பொருளும் இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. மொத்தம், 33 தலைப்புகளில் கவிதைகள் மிளிர்கின்றன. எடுத்துக் கொண்ட தலைப்பிலிருந்து வழுவாமல் இருக்கின்றன. அளவான வார்த்தைகளில் அலங்காரமின்றி யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. கவித்துவம், ஆன்மிகம், ஆர்வம், உள்ளக் குமுறல்கள் யாவும் கருப்பொருளாக இருக்கின்றன. சமூக அவலங்களை சாடி, அத்துமீறல்களை தோலுரித்துக் காட்டுகின்றன. சல்லி வேர்கள், கண்ணீர் விலங்கு, முட்களே நிழல்களாய், எச்சில் நாய்கள் கவிதைகள் யதார்த்தத்தை பட்டவர்த்தனமாக காட்டுகின்றன. கவிதைகளில் உறைந்திருக்கும் அழகு வசீகரிக்கும் வகையில் உள்ளது. – ஊஞ்சல் பிரபு




