/ புத்தக மதிப்புரை / சகல ஐஸ்வர்யங்கள் அளிக்கும் அஷ்டோத்தர கதம்ப மாலை

₹ 150

இறை பக்திக்கு உகந்த தோத்திர புத்தகம். ஸ்ரீ கணேச அஷ்டோத்தர சத நாமாவளி ஒன்பது பகுதிகளாகவும், சித்தி, புத்தி தேவிக்கு தலா ஒரு அஷ்டோத்தர சத நாமாவளியும் உள்ளன. ஸ்ரீ சுப்பிரமணியர் அஷ்டோத்தர சத நாமாவளியும், ஸ்ரீ சண்முகரின் ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு அஷ்டோத்தர சத நாமாவளியாக ஆறுமுகத்திற்கும் தனித்தனியாக உள்ளன. வள்ளி, தேவசேனாவுக்கு தனித்தனி அஷ்டோத்தர சத நாமாவளி உள்ளது. ஸ்ரீ ராமருக்கு ஒரு அஷ்டோத்தர சதா நாமாவளி உள்ளது போல், ஸ்ரீ சீதாதேவிக்கும், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் தனித்தனி அஷ்டோத்தர நாமாவளிகள் தரப்பட்டுள்ளன. பூஜை புனஸ்காரங்களுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ள கதம்ப மாலை. – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை