/ வரலாறு / சமணர் கழுவேற்றம்
சமணர் கழுவேற்றம்
வரலாற்று தேடலான ஆய்வு நுால். சமணர் கழுவேற்றம் குறித்த விவாதம் சார்ந்தது. வரலாற்று ஆவணம், கள ஆய்வு, சமண மடாதிபதியுடன் நேர்காணல் என, தேடலுக்கு முடிவு காணும் முயற்சிக்கிறார்!சமணர்கள், உண்மையிலேயே கழுவேற்றப்பட்டனரா... இப்பிரச்னையில், திருஞான சம்பந்தரின் பங்கு போன்ற கேள்விகளை முன்னிறுத்தி விவாதங்களை விவரித்து, சமணர் கழுவேற்றம் என்பது கற்பனை என்கிறார்!தேவாரப் பாடல்களில் சமணர் கழுவேற்றம் தொடர்பாக, குறிப்பு இல்லை. அதேபோல், சமண இலக்கியங்களிலோ, ஆவணங்களிலோ கழுவேற்றம் பற்றி குறிப்பிடவே இல்லை என, விளக்குகிறது நுால்.– எஸ்.குரு