/ இலக்கியம் / சமற்கிருதம் செம்மொழியல்ல

₹ 100

உலக தமிழ் செம்மொழி ஆராய்ச்சி நிலையம் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட மொழி விமர்சன நுால். பேராசிரியர் ப.மருதநாயகம் எழுதியதில் இருந்து ஒரு பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.இரண்டு தலைப்புகளில் கருத்துகள் உள்ளன. இதில், சமஸ்கிருத மொழி சார்ந்த விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வாதங்கள் அமைந்துள்ளன. சமஸ்கிருத மொழியில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட பொருண்மை சார்ந்த ஆய்வு முடிவுகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. பழமையான மொழி இலக்கியங்கள் மீது விமர்சன கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன. மொழியறிவை முன் வைக்கும் நுால்.– ராம்


முக்கிய வீடியோ