/ இலக்கியம் / சங்க இலக்கியம் ஆய்வுகளும் அட்டவணைகளும்

₹ 650

தமிழறிஞர் பேராசிரியர் ந.சஞ்சீவியின் சங்க கால ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் சங்க இலக்கிய அட்டவணைகள் தொகுத்து தரப்பட்டுள்ள நுால். சங்க கால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில் பாடியோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட பொருள் விரிவாக தரப்பட்டு உள்ளன. சங்க இலக்கியங்களில் அமைந்துள்ள நுட்பங்களை எடுத்துக் காட்டுகின்றன.பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பற்றிய பழம்பாடல்களும், புலவர் எண்தொகை விளக்கமும் தரப்பட்டுள்ளது. எட்டுத்தொகை பாடல் எண்ணிக்கையில் உள்ள ஐயங்கள், பாடல்களில் உள்ள அடி வரம்புகள், பாகுபாடுகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. புலவர்களின் பெயர்க் காரணங்கள், பெண்பால் புலவர்களின் விபரங்கள், பன்னாட்டுப் புலவர்களின் பெயர்கள், சங்கப்பாடல்கள் இயற்றிய அரசர்கள் பற்றியும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை