/ இலக்கியம் / சங்கத்தமிழ் பொருட்களஞ்சியம்

₹ 200

சங்க இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகளை முன்வைக்கும் நுால். இறையியல், வாழ்வியல், உலகியல், வாழ்த்தியல், பொதுவியல் என பகுத்து, பாடல்கள் மேற்கோள்களோடு விளக்கம் தருகின்றன. பழங்காலத்தில் சங்கப் புலவர்களால் பதிவு செய்யப்பட்ட வாழ்க்கை ஒழுக்கங்களை கூறுகிறது. மாந்தர் வழிபாடு சார்ந்த பாடல்களில் இறைவன் இயல்பு, இல்ல வழிபாடு, பொதுவிட வழிபாடு, நடுகல் வழிபாடுகளை எளிய நடையில் விளக்குகிறது. சங்க கால மாந்தரின் அக வாழ்க்கை, இல்லற கடமைகள், ஒழுக்கங்கள், விருந்தோம்பலை தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டுகிறது. சிறப்பான வாழ்வை மேற்கொள்வதற்கான அறம் சார்ந்த கருத்துக்களை முன்வைக்கிறது. மன்னர்களின் கொடை பண்பு, போர் அறத்தையும் அறிய தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


முக்கிய வீடியோ