/ கவிதைகள் / சந்தப் பறவை
சந்தப் பறவை
மனதில் பதியும் சந்த கவிதைகளின் தொகுப்பு நுால். பல தலைப்புகளில், 101 கவிதைகள் உள்ளன. இளமை யில் துணிந்து தவறு செய்யும் இளைஞரை திருத்தும் வகையில், ‘இளமை இருக்கும் திமிரில்தானே எதையோ தேடி அலைகிறாய்; துளியும் மனதில் பயமில்லாமல் துணிந்தே தவறுகள் செய்கிறாய்’ என எடுத்துரைக்கிறது. வாழ்வில் நம்பிக்கை இல்லாதோர் செத்து பிழைத்தபடி இருப்பர். நம்பிக்கை சிறப்பை, ‘இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் இருப்பது தான், வருங்காலம் நமக்கென்று வழிகாட்ட உள்ள வழி’ என தெரிவித்துள்ளது. அத்தனை கவிதையிலும் சந்தம் தவழ்ந்து சிந்தனையை நிறைக்கிறது. ஓவியங்களுடன் கண்ணை கவரும் நுால். – முகிலை ராசபாண்டியன்




