/ புத்தக மதிப்புரை / சப்த தாண்டவத்தலங்கள்

₹ 450

நடனக்கலை பற்றி விளக்கும் நுால். நடனத்தின் பின்னணி, புராண அடிப்படையில் அமைந்திருப்பதை குறிப்பிடுகிறது. பஞ்ச சபை திருத்தலங்கள் பற்றி விளக்கம் தருகிறது. சப்த தாண்டவத் தலங்கள், திருத்தாண்டவங்கள் பற்றி எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு தலத்திலும் இறைவன், இறைவி, கோவில் அமைப்பு, சிற்பங்கள், ஓவியங்கள், தாண்டவத்தின் திருவுருவச் சிறப்பு, தலப்பெருமை, வழிபாடுகள், விழாக்கள் குறித்து விரிவாக அறிய தருகிறது. ராஜ திருப்பதிகங்களுக்கு பண்கள் வகுத்து, திருமுறை பாடல்கள் உதவியுடன் பயிற்றுவிக்கப் பட்டதை கூறுகிறது. சிவபெருமான் உருவ அமைப்பு களையும், எந்தெந்த தலத்தில் எவ்வகையிலான தாண்டவம் ஆடப்பட்டது என்பதையும் அறிய தருகிறது. நடனம் பயில்வோர் படிக்க வேண்டிய நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


புதிய வீடியோ