/ அரசியல் / சட்டப்பேரவையில் மூக்கையாத் தேவர்

₹ 240

சட்டப்பேரவையில் மூக்கையாத் தேவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். வைகை அணை திட்டம், முதுகுளத்துார் கலவரம் தொடர்பாக பேசியவை வரலாற்றுப் பதிவுகள்.அமைச்சராக இருந்த கக்கனை எதிர்த்த விவாதம் வெளிப்படுகிறது. தாக்குதல் தன்மை அதில் இல்லை. முத்துராமலிங்க தேவர் செயல்களை எடுத்துக்கூறி, சட்டப் பேரவையில் முழங்கியுள்ளார்.நிலவரி கொடுக்க முடியாத வறுமையில் தொகுதி மக்கள் இருப்பதாகத் தெரிவித்தவருக்கு அப்போதைய முதல்வர் அளித்த பதிலுரை, அதற்கு வழங்கிய மறுப்புரை பரஸ்பர மரியாதைக்கு இலக்கணமாக அமைந்துள்ளன. மூக்கையாத் தேவர் சட்டப்பேரவையில் ஆற்றிய உரை வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது. உண்மை வரலாற்றை அறிந்து கொள்வதற்கு உதவும் நுால்.– முகிலை ராசபாண்டியன்


முக்கிய வீடியோ