/ கட்டுரைகள் / செயல் ஒன்று பார்வை இரண்டு
செயல் ஒன்று பார்வை இரண்டு
வாழ்க்கை நிகழ்வுகளில் நேர்மறை, எதிர்மறையை சீர்துாக்கி சிந்திக்க துாண்டும் நுால். பால் பொங்கும் நிகழ்வை புதுமனை புகுவிழாவில் கொண்டாடி, காபி தயாரிப்பில் வீணாக்குவதாக தெரிவிக்கிறது. அதில் சர்க்கரையின் தேவை நகைச்சுவை ததும்ப கூறப்பட்டுள்ளது. சூரியன் ஒளிர்வது உண்மை; கிழக்கில் உதிப்பதாக கருதுவது பொய்யான உண்மை என விவரிக்கிறது. பூமியில் நிலப்பரப்பு கால் பாகம்; தண்ணீர் முக்கால் பாகம் என்பதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. காதலில் தொடுதல் பாலியல் துஷ்பிரயோகமாவதை எடுத்துரைக்கிறது. பார்வை கோணங்களை வேறுபடுத்தி காட்டும் நுால்.– புலவர் சு.மதியழகன்