/ வாழ்க்கை வரலாறு / சங்கரர் என்கிற புரட்சிக்காரர்
சங்கரர் என்கிற புரட்சிக்காரர்
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு, ஆன்மிக தத்துவங்களை தொகுத்து தரும் நுால். சங்கரர் வாழ்ந்த கால ஆராய்ச்சி பற்றி விவாதிக்கிறது. அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறி, ஆன்மிக ஆளுமையை காட்டுகிறது. இளம் வயதிலே தளராமல் நடை பயணம் மேற்கொண்டு அவதாரமாக உயர்ந்ததை விவரிக்கிறது. சங்கரர் மீது எழுதப்பட்ட புத்தகங்கள் பற்றிய தகவல்களும் உள்ளன. அவர் இயற்றிய தத்துவ விசாரம், பக்தி யோகத்தை விளக்குகிறது. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் தத்துவங்களை உலகறியச் செய்த முனைப்பை முன்வைக்கிறது. பவுத்த சமயத்திற்கெதிரான கோட்பாடுகளை அலசுகிறது. சங்கரர் பற்றிய ஆன்மிகச் செய்திகளையும் உள்ளடக்கிய விரிவான நுால். –- கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு