/ வாழ்க்கை வரலாறு / சித்தார்த்த கெளதமர் (வாழ்வும் வாக்கும்)
சித்தார்த்த கெளதமர் (வாழ்வும் வாக்கும்)
கவுதம புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ள நுால். அரச குடும்பத்தில் பிறந்து துறவு மேற்கொண்டதற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் அலசப்பட்டுள்ளன. உழைப்பின் மேன்மையை வாழ்வின் ஒழுங்கு முறையாக உணர்த்திய விதம் குறித்து கூறப்பட்டுள்ளது. புத்தரின் வாழ்க்கை பற்றி வழக்கமாக கூறப்படும் கதைகளுடன் வரலாற்றில் இருந்தும் தகவல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இளம் பருவத்திலே உழைப்பின் மீது இருந்த ஆர்வம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புத்தரின் துறவு வாழ்வின் போது அவரை துாற்றுவதற்காக நடந்த செயல்களும், அவை எடுபடாமல் போனது பற்றியும் பல செய்திகள் உள்ளன. உண்மையை உணர்ந்து உலகுக்கு அறிவு ஒளி பாய்ச்ச மேற்கொண்ட செயல்பாட்டை எடுத்துரைக்கும் நுால். – ஒளி




