/ ஆன்மிகம் / சித்தத்தில் ஏற்றுவோம் நித்தம் ஒரு சிவ தரிசனம்

₹ 256

‘சித்தத்தில் ஏற்றுவோம் நித்தம் ஒரு சிவதரிசனம்’ என்னும் நூல் ஒரு சிறந்த சிவ தரிசன வழிகாட்டி நூலாகும். இந்நூலில் மொத்தம் 644 சிவதரிசனகளின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் தமிழ்நாடு,ஹரித்துவார் ரிஸகேஸி,அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற இடங்களில் உள்ள திருத்தலங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு சிவதரிசன வழிகாட்டி நூலாகும். இங்கிலாந்தில் சைவ முன்னேற்ற சங்க 37 வது ஆண்டு விழாவில் இந்நூல் இலண்டன் ஈஸ்ட்காம் திருமுருகன் திருத்தலத்தின் நிர்வாகத்தின் துணையோடு வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கு, ‘பிரபாராஜன் டேலண்ட் பவுண்டேசன்’ மற்றும் ‘தேஜஸ் பவுண்டேசன்’ அமைப்புகள் சார்பில் சிறந்த தமிழ் ஆன்மிக நூல்களுக்கான விருது வழங்கப்பட்டுளளது. இந்நூலாசிரியர் சிவஒளி, சண்முககவசம், பாபாஜி சித்தர் ஆன்மிகம். சிவமலர் இராஜகோபுரம், மாத இதழில் கட்டுரை எழுதியுள்ளார். இவரால் படைக்கப்பட்ட பொதிகைமலைப் பயணமும் துருவ நட்சத்திர தியானம் என்னும் நூல் சிவ ஒளி இதழில் தொடர் கட்டுரையாக வெளிவந்தது. சதுரகிரி பயணம் கட்டுரையும் சிவ ஒளி மாத இதழில் தொடர்கட்டுரையாக வெளிவந்தது. இந்த நூல் ஆசிரியர், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தொழில் நுட்ப அதிகாரியாக ஓய்வு பெற்றவர். இவர் பணியில் இருந்த போது இவரால் எழுதப்பட்ட ‘அதி நவீன அர்ஜுன் முதன்மைப் போர் ஊர்தி’ அன்றைய பாதுகாப்பு அமைச்சரின் விஞ்ஞான ஆலோசகர் சரஸ்வத்தால் வெளியிடப்பட்டது. ச.பொன்ராஜ். 7/497 ‘டி’ பகுதி 58வது தெரு. சிட்கோநகர், வில்லிவாக்கம் சென்னை-600 049 தொலைபேசி 044 2617 1965 கையகப்பேசி எண் 9962040695


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை