/ புத்தக மதிப்புரை / சிகரங்கள்
சிகரங்கள்
அறக் கருத்துக்களை வலியுறுத்தும் சிறுவர் நாவல். வாழ்வில் சந்திக்கும் தெரிந்த மனிதர்களே கதாபாத்திரங்களாக கண் முன் உலா வருகின்றன. வளர்மதி,தேன்மொழி, கரிகாலன் என்று மூன்று மாற்றுத்திறனாளி கதாபாத்திரங்களும், அவர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு உதவும் சக மாணவன் சந்திரன் லட்சியத்தோடு உலா வருவதை எடுத்துக்காட்டுகிறது. தலைமையாசிரியர் பாத்திரம் வீரம் மிக்கதாக சித்தரித்திருப்பது கதைக்கு விறுவிறுப்பு ஊட்டுகிறது. உயிர்களை பலியாக்கும் கள்ளச் சாராய வியாபாரியை வர்மக்கலையால் தண்டித்து, பக்குவமாக சுட்டிக்காட்டி திருத்தும் விதம் மனதைத் தொடுகிறது. விவசாயம், தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது பொறுப்புடன் உள்ளது. சிறுவர், சிறுமியர் இதயத்தை தொடும் நாவல். – ஊஞ்சல் பிரபு




