/ கதைகள் / சிலந்தி வலை

₹ 140

சமுதாயத்தின் நிலையை படம் பிடித்துக் காட்டும் சிறுகதை தொகுப்பு நுால். தலைப்பாக வரும் சிலந்தி வலை, இரு வேறு சமூக ஆண், பெண் காதல் முடிவு என்ன என்பதை கூறுகிறது. அடுத்து, ‘திரிசங்கு சொர்க்கம்’ சிறுகதை எல்லா திறமைகள் இருந்தும், மூன்றாம் பாலின பெண் வேலையின்றி அவமானங்களை சந்தித்தது கூறப்பட்டுள்ளது. கல்வியை விற்பனை செய்து வரும் தனியார் பள்ளிகளின் அட்டூழியத்தை, ‘தேர்வு’ சிறுகதை தோலுரித்துக் காட்டியுள்ளது. சமுதாய அவலநிலையை காட்டும் நுால். – முகில் குமரன்


புதிய வீடியோ