/ தமிழ்மொழி / எளிமைத் தமிழ் இலக்கணம்
எளிமைத் தமிழ் இலக்கணம்
தமிழ் மொழியின் அடிப்படை இலக்கணங்களை விரித்துரைக்கும் நுால். எழுத்திலக்கணத்தில் முதல், சார்பெழுத்து வகைகள், பிறக்கும் இடங்கள், மாத்திரை அளவுகள் சுட்டப்பட்டுள்ளன. சொல் இலக்கணத்தில் பெயர், வினை, இடைச்சொல், உரிச்சொல், ஓரெழுத்து ஒரு மொழி, பொருள்கள் பற்றி பதிவிடப்பட்டுள்ளது. வல்லினம் மிகும், மிகா இடங்கள், வேற்றுமை, உருபு மயக்கம், ஆகுபெயர், இயல்புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. அன்பின் ஐந்திணை, முதல், உரி, கருப்பொருட்கள்மற்றும் புறத்திணை பற்றியும் கூறுகிறது. தமிழ் மொழியை முறைப்படி எழுதவும், பேசவும் கற்பிக்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்