/ புத்தக மதிப்புரை / சினிமாவின் ஆன்மா

₹ 180

குழந்தைகள் உலகத்தை படம் பிடித்துள்ள திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிறுவர், சிறுமியரின் இனிய உலகம், ஏழை மக்களின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக உடைய உலக திரைப்படங்கள் குறித்த விபரங்கள் உள்ளன. குழந்தைகளிடம் தர்க்கம் இன்றி உணர்வு மட்டும் மேலோங்கி இருப்பதை சித்தரிக்கின்றன. இது குறித்த கட்டுரைகள் தனித்துவமாக படைக்கப்பட்டுள்ளன. பல காலகட்டங்களில் உலகில் பல்வேறு பகுதிகளில் வெளியான, 20 திரைப்பட விபரங்கள் சித்திரமாக தீட்டி காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் பின்னணி குறித்த செய்திகள் உயிர்ப்புடன் தரப்பட்டுள்ளன. அன்பின் செயல்பாட்டை நுட்பமாக காட்டும் படங்களின் அறிமுகம் ஈர்க்கிறது. மனதில் நெகிழ்வு ஏற்படுத்தும் உலகத் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் நுால். – ஊஞ்சல் பிரபு


சமீபத்திய செய்தி