/ அறிவியல் / ஒளியியலின் தந்தை சர் சி.வி.இராமன்
ஒளியியலின் தந்தை சர் சி.வி.இராமன்
அறிவியலில் மதிப்புமிக்க சாதனைகள் புரிந்த விஞ்ஞானி சி.வி.ராமன் வாழ்க்கையை எளிமையாக கூறும் நுால். மாணவ, மாணவியருக்கு வழிகாட்டும் வகையில் உள்ளது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி.வி.ராமன் வாழ்க்கை நிகழ்வுகள், 12 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. சிறுவயது ஆராய்ச்சி, கல்லுாரி காலம், கொல்கட்டா வாசம், இங்கிலாந்து பயணம் என முக்கிய நிகழ்வுகள் எளிமையாக தரப்பட்டுள்ளன. அரிய சாதனைகள் புரிந்த விஞ்ஞானி ராமனுக்கு, உலகம் தந்த கவுரவங்கள், பரிசுகள் பற்றிய விபரமும் தொகுக்கப்பட்டுள்ளது. அவரது உயர்வுக்கு துணைபுரிந்தோரையும் அடையாளம் காட்டுகிறது. சிறுவர், சிறுமியருக்கு அறிவூட்டும் வகையில் எளிய நடையில் அமைந்துள்ள நுால். – ஒளி