/ தமிழ்மொழி / சொல்லோவியன் குறள்

₹ 270

குறள் இலக்கணத்தின் அடியொற்றி படைக்கப்பட்டுள்ள பாக்களின் தொகுப்பு நுால். நல்லறம் புகட்டும் வகையில் அமைந்துள்ளது. நிகழ்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அறத்தை கடைப்பிடிக்கும் வகையில் குறட்பாக்கள் புனையப்பட்டுள்ளன. ஒரு தலைப்புக்கு, ஐந்து பாக்கள் வீதம் கடவுள் வாழ்த்து துவங்கி, பாடம் கற்றல் வரை, 73 தலைப்புகள் உள்ளன. பொருள் தேடுதல், சேமிப்பு, வரலாறு அறிதல், இயற்கையை பேணல் என நவீன சிந்தனைகளை வழிமொழிகிறது. ஒவ்வொரு பாவும் தனித்துவமாக அமைந்துள்ளன. எளிய நடையில் புனையப்பட்டு, தக்க பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளதால் புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளன. வாழ்வை மேம்படுத்தும் சிந்தனைகள் நிறைந்துள்ளன. உள்ளத்தை செம்மைப்படுத்தி சமூகத்தை புரிய உதவும் பாக்களின் தொகுப்பு நுால். – ராம்


புதிய வீடியோ