/ ஆன்மிகம் / ஸ்ரீவசன பூஷணம்
ஸ்ரீவசன பூஷணம்
வைணவ தத்துவம், இதம், புருஷார்த்தம் ஆகியவற்றை விளக்க, ஆசாரியர்கள் எழுதியுள்ள நூல்களில், இந்த நூல் பலரால் போற்றப்படுகின்றது. பெரும்பாலும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் இவை இருப்பதால், தற்காலத்தில் படிப்போர்க்குக் கடினம். அதனால், எளிய தமிழில், அவற்றுக்கு இந்த உரை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சொல்லழகும்,பொருளழகும் உடைய ‘ஸ்ரீவசன பூஷணம்’ என்ற நூலை, பிள்ளைலோகாசாரியர் அருளி செய்தார். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் வேத அர்த்தத்தை நிர்ணயிக்கிறது என்றும், சரணாகதியின் மேன்மை, பிராட்டியின் புருஷாகாரத்தின் (பரிந்துரை) சிறப்பு, இதில் விளக்கப்பட்டுள்ளன.டாக்டர் கலியன் சம்பத்து