/ அரசியல் / ஸ்ரீலஸ்ரீ சகஜானந்தர் சட்டமன்ற உரைகள்

₹ 780

தமிழக சட்டசபையில் சகஜானந்தர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். தீண்டாமை, ஜாதி கொடுமைக்கு எதிராக, 1927 – 1959 வரையிலான காலக்கட்டத்தில் தமிழக சட்டசபையில் ஆற்றிய உரை விபரம் உள்ளது. உரைகள் ஆண்டு வாரியாக தரப்பட்டுள்ளன. தீண்டாமை, ஜாதி கொடுமை, பொது கிணற்றில் குடிநீர் எடுக்கும் உரிமை தொடர்பான பல்வேறு செயல்பாடுகள் குறித்த விபரங்கள் உள்ளன. ஏழை மக்களின் வளர்ச்சி மற்றும் பிரச்னைகளை மையப்படுத்திய குரலாக வெளிப்பட்டுள்ளது. குடியிருப்பு, பள்ளி, கைத்தொழில் வளர்ச்சி என, மக்களை உயர்த்தும் வகையிலான கருத்துகள் உரத்த குரலாக ஒலித்துள்ளன. மக்கள் நலனை முன்வைத்து, வளர்ச்சிக்கு ஆதரவாக அமைந்த உரைகளின் தொகுப்பு நுால். – மதி


முக்கிய வீடியோ