ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிகமும் ஸ்ரீ அன்னையின் அருள் ஆசியும்
23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. (பக்கம் : 216) ஸ்ரீ அரவிந்தர் "பூரண யோகம் என்ற உத்தியைப் பரப்பி, எல்லாரிடமும் ஆன்மிகம் முகிழ்க்க உதவிய மகான்.ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னையை அதிகம் பேர் தற்போது உணர்ந்து, மனதில் அமைதி பெற முயற்சிக்கத் துவங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் அரவிந்தரின் தத்துவம், அதற்கு அன்னை பேருதவியாக இருந்து, ஆன்மிகத் தேடலில் உதவிய விதம், சிறப்பாக ஆசிரியரால், இந்தநூலில் கையாளப்பட்டிருக்கிறது.பக்தியால் இறைவனைக் காணும் வழியை ஓரளவு சுலபமாக புரிய வைக்கலாம். ஆனால் மேம்பட்ட அறிவுத் தேடலால், ஆன்மிக நெறியில் உயர்ந்து, பூரணத்துவம் பெறும் அரவிந்தரின் வழியை ஆசிரியர் புரிய வைத்திருப்பது சிறப்பானது. மேலும், வழக்கமாக நம்நாட்டு அருளாளர்கள் பலர் போல இல்லாமல், அரவிந்தர் காட்டிய நெறி மற்றும் வாழ்க்கை முறைக்கு, ஒரு ஒழுங்கான ஓடுபாதையை அன்னை துவக்க காலத்தில் இருந்து, திட்டமிட்டு உதவியதையும் இந்த நூலில் காணலாம். அதை ஆசிரியர் , "ஸாதகர்கள் திறந்த மனதுடன் அன்னையின் சக்தியைப் பெற முயல வேண்டும் (பக்.56) என, அரவிந்தர் கூறியதைப் பதிவு செய்திருக்கிறார்.ஆரோவில் விடியல் நகரம் குறித்த தகவல்கள் உட்பட மொத்தம், 10 தலைப்புகளில் அரவிந்தர் நெறியை சிறப்பாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். பூவுலகை தெய்வீக உணர்வு பெறச் செய்து பூமியே சொர்க்கம் ஆக மாற, மனித இனம் பயணிக்க விரும்பி எழுதப்பட்ட இந்த நூல், தமிழக வாசகர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.