/ ஆன்மிகம் / ஸ்ரீமத் பகவத் கீதை

₹ 595

உலக தத்துவங்களில் தனித்துவம் பெற்றுள்ள பகவத் கீதை சுலோகங்களுக்கு தெளிவான உரையுடன் அமைந்துள்ள நுால். ஆதிசங்கரரின் விளக்க உரை, பாரதியின் மொழிபெயர்ப்பும் இணைத்து தரப்பட்டுள்ளன. ஆதிசங்கரரின் ‘பாஷ்யம்’ ஞானமார்க்கத்தின் முக்கியத்துவத்தையும், பாரதியின் மொழிபெயர்ப்பு பக்தி, கர்மயோகத்தின் சிறப்பையும் வலியுறுத்தும் வகையில் அமைந்து, வாழ்வில் முழுமை அடையும் வழிகளை உணர்த்துகின்றன. கீதையில் உள்ள தத்துவங்களை முழுமையாக புரிந்து வாழ்வில் ஒழுகும் வண்ணம் கருத்து கோர்வையாக உருவாக்கப்பட்டுள்ளது. பகவத் கீதையில் உள்ள தத்துவக் கருத்துகளை இன்றைய நிலையில் புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நுாலின் முதல் அத்தியாயமான, ‘அர்ஜுன விஷாத யோகம்’ மகாபாரத போர்க்கள பின்னணியில் கீதை உபதேசிக்கப்பட்டது தொடர்பான தகவல்களை உள்ளடக்கி உள்ளது. தொடர்ந்து வரும் அத்தியாயங்களிலும் மூல வடிவமான வடமொழியில் அமைந்த சுலோகங்கள் முழுமையாக தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுலோகத்துடனும் அவற்றை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக தமிழ் வரிவடிவம் தரப்பட்டுள்ளது. சுலோகங்களை உச்சரிக்கவும், ஒலியை மாறாமல் அறிந்துகொள்ளவும் வாய்ப்பாக இது உள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தின் உள்ளடக்கமும் அந்தந்த அத்தியாயத்தின் துவக்கப் பகுதியிலே எளிய நடையில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. இது தத்துவக் கருத்தை சுலபமாக புரிந்து கொள்ள வழிகாட்டியாக உள்ளது. எளிய மொழி நடையில் அமைந்துள்ளதால் கீதை கருத்துகளை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. இறுதியில் சுலோகங்களின் அகராதியும், உள்ளடக்க விபரமும் தெளிவாக தரப்பட்டுள்ளது. பகவத் கீதை தத்துவத்தை எளிதாக புரிந்து கெள்ள ஏற்ற வகையில் அமைந்துள்ள நுால். – சிவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை