/ ஆன்மிகம் / ஸ்ரீமஹா சண்டீ மஹா யாக விதானம்
ஸ்ரீமஹா சண்டீ மஹா யாக விதானம்
சண்டிகாதேவியின் மீதான யாக நுால். பூஜை மந்திரங்களை தவறாமல் செய்வதற்கான விளக்கங்களை கூறுகிறது. ஸ்ரீசண்டீ ஹோமத்திற்கு தேவையான பொருட்களை குறிப்பிடுகிறது. படையல் வைக்கும் முறையை சொல்கிறது. ஊழியிலிருந்து காக்கும் வல்லமை படைத்த தெய்வமாக கற்பித்து எழுதப்பட்ட யாக சுலோகங்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. நற்காரியங்களுக்காக ஹோம யாக பூஜைகள் செய்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி கூறுகிறது. பூஜைக்கு வேண்டிய பொருட்கள், நல்ல நாள், நேரம், இடம் தேர்ந்தெடுத்தல், பூஜை தொடங்குவதற்கான திசை, உடை தேர்வு பற்றி முழுமையான தகவல்களை கூறுகிறது. ஸ்ரீசண்டீ ஹோமம் செய்வோருக்கு பயன் தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




