/ ஆன்மிகம் / ஸ்ரீமத் பகவத் கீதை உரை விளக்கம்
ஸ்ரீமத் பகவத் கீதை உரை விளக்கம்
கீதையின் மூலத்துக்கான உரை விளக்கம் அடங்கிய நுால். சமஸ்கிருத சுலோகங்களைப் பதிவிட்டு தமிழில் விளக்கம் தரப்பட்டுள்ளது. பாண்டவருக்கும், கவுரவருக்கும் இடையிலான போருக்கு முன்னர் ஆதரவு கோரி கண்ணனை அணுகும் துரியோதனன், அருச்சுனன் சந்திப்பை விளக்கி, கீதையின் தோற்றம் தரப்பட்டுள்ளது. போர்க்களத்தில் உரைக்கப்பட்டது பற்றியும் அறிய தருகிறது. கீதையை யோக சாத்திரமாகக் காட்டி, ஞானத்துக்கான நேர்மறை கோட்பாடு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கர்மயோக தத்துவங்கள், பக்தியோக தத்துவங்கள், ஞானயோக தத்துவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. கீதையின் சாரங்களை பின்பற்ற வலியுறுத்தும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு