/ ஆன்மிகம் / ஸ்ரீராமகிருஷ்ணரே சிவபெருமான்!
ஸ்ரீராமகிருஷ்ணரே சிவபெருமான்!
வேத காலம் முதல் புராண காலம் வரை சிவனின் பல்வேறு நாமங்களை எடுத்துரைக்கும் நுால். ராமகிருஷ்ணரின் தந்தை சிவபக்தியால் காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் நடந்தே சென்று வழிபட்டவர். தாய் மீது லிங்கம் ஒளிவெள்ளம் பாய்ந்தபின் பிறந்ததால் ராமகிருஷ்ணர் சிவ வடிவமாக அவதரித்ததாக தெளிவுபடுத்துகிறது. ஒரு சிவராத்திரியின் போது தான் ஞான நிலையை அடைந்தார் ராமகிருஷ்ணர். காலபைரவர் வழிகாட்டலில் காசிக்கு வந்தவர் ராமகிருஷ்ணர். அங்கு கோவில் கொண்டுள்ள விஸ்வநாதன் என்ற சிவனுடன் ஐக்கியமானவர். அந்த விஸ்வநாதனே ராமகிருஷ்ணர் என உருகிக் கூறுகிறது. நடராஜர் வடிவமாக திகழ்ந்ததாகவும் கூறுகிறது. ராமகிருஷ்ணரையும், சிவனையும் ஒருமைப்படுத்தும் நுால். – முகிலை ராசபாண்டியன்




