/ ஆன்மிகம் / ஸ்ரீரமண பாகவதம்
ஸ்ரீரமண பாகவதம்
மனிதனுக்கு அருள் செய்வது மனிதாபிமானம். எங்கேயோ கிடக்கும் சொரிபிடித்த நாய்க்கும் அருள் செய்வது யாரால் முடியும். பகவான் ஸ்ரீ ரமணரால் மட்டுமே முடியும். மனித உயிராவது தன்னுணர்வை வெளிப்படுத்தும். நாயின் ஆத்மா தரிசனத்துக்காக ஏங்குவதை உணர்ந்து நற்கதி தருவது மகான், ரமண மகரிஷிக்கு மட்டுமே சாத்தியம். உடல், மனதை பிரித்தறியும் வழியை சொல்கிறார். மனம் தான் பிரச்னைகளுக்கும் காரணம் என்ற விளக்கம் அருமை. ஆத்மாவை பிரித்தறிய முடியாமல் தடுமாறும் போதெல்லாம் ஆத்ம விசாரம் செய்ய சொல்கிறார். மற்றவர்களுக்காக வாழ்ந்த மகானின் வரலாற்றை படிப்பது அவருடன் பயணிப்பதற்கு சமம். ரமணருக்கு சூட்டப்பட்ட மாலை.– எம்.எம்.ஜெ.,