/ மாணவருக்காக / பெற்றோர் – ஆசிரியர் உருவாக்க வேண்டிய மாணவச் செல்வங்கள்
பெற்றோர் – ஆசிரியர் உருவாக்க வேண்டிய மாணவச் செல்வங்கள்
பள்ளி மாணவருக்கு அறம் போதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். பழந்தமிழ் புலவர்கள் அவ்வையார், திருவள்ளுவர் கருத்துகளும் எடுத்தாளப்பட்டுள்ளன. பணம், மதிப்பு, அறிவை விடவும் தலைசிறந்தது நல்ல சுபாவம் என்ற கருத்தை விளக்குகிறது. விரும்பியதை அடைவது வசதி நிறைந்த வாழ்க்கை; கிடைத்ததை விரும்புவது மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை என போதிக்கிறது. உடல் நலம் காக்க குழந்தையின் வயது, உயரம், எடை அளவு பற்றிய பட்டியல் பின்பற்றக்கூடிய மருத்துவ குறிப்பாக உள்ளது. நேர்மைக்கு பலன் கிடைத்தே தீரும்; ஆனால் காத்திருக்க வேண்டும் போன்ற போதனைகள் உள்ளன. வாழ்வை இனிக்க வைக்கும் நுால். – சீத்தலைச்சாத்தன்




