/ வாழ்க்கை வரலாறு / சுந்தர் பிச்சை

₹ 190

உலகின் அறிவு செயல்பாட்டுக்கு உகந்த தொழில்நுட்பத்தை வழங்கி வரும் ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் சுந்தர் பிச்சை வாழ்க்கையை விவரிக்கும் நுால். சென்னையில் பள்ளிப் பருவம், சாதாரண பணியில் இருந்து தலைமை பொறுப்புக்கு உயர்ந்தது வரை, பயணத்தை கதை போல் விவரிக்கிறது. வாழ்க்கை பயணத்தில் ஏற்பட்ட சோதனைகள், தடைகள், அவற்றைத் தகர்க்க எடுத்த முயற்சிகள் எல்லாம் சொல்லப்பட்டுள்ளன. நம்பிக்கையுடன் செயல்பட்டதால் கிடைத்த பலன்கள், சாதனைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் நிகழ்வுகள் புத்தகம் முழுக்க உள்ளன. நம்பிக்கையுடன் வாழ்வில் உயர விரும்புவோருக்கு நல்ல செய்திகள் உள்ளன. சாதனை புரிந்து வருபவரின் வாழ்க்கை வரலாற்று நுால்.– ராம்