/ கட்டுரைகள் / சுற்றுச்சூழல் கருத்துப்பேழை

₹ 200

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி விவரிக்கும் நுால். மேற்கு தொடர்ச்சி மலையின் மேன்மையால் ஏற்படும் விளைவு கூறப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை எத்தனை ஆபத்தானாலும் அதை உரமாகப் பயன்படுத்தலாம் என அறிவுரை கூறுகிறது. ஈர நிலங்களை பேணி காக்க வேண்டியதன் அவசியம் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தால் விளையும் நன்மை விளக்கப்பட்டுள்ளது. எத்தனால், பயோ டீசல் என உயிரி எரிபொருட்கள் பற்றிய செய்திகள் மிகவும் அருமை. உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் இந்தியா ஆற்றிய பங்கு பற்றி விவரிக்கிறது. பொறுப்பான குடிமக்களின் சமுதாய கடமையை விளக்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


முக்கிய வீடியோ