/ தமிழ்மொழி / தமிழ்த் தொண்டர்த் தொகை
தமிழ்த் தொண்டர்த் தொகை
தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்களை அறிமுகம் செய்யும் நுால். குமரகுருபரர் துவங்கி, வள்ளலார், உ.வே.சாமிநாதையர், எழுத்தாளர் புதுமைப்பித்தன் என, 100 அறிஞர்களின் வாழ்க்கை மற்றும் தொண்டின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரையுடன் அந்தந்த அறிஞரின் படங்களும் தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிறந்து தொண்டாற்றியோர் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்து மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டோர் விபரங்களும் உள்ளன. படைப்பாளர், மொழியியல் ஆய்வாளர், கவிஞர், பாடலாசிரியர், பழந்தமிழ்ச்சுவடிகளை பதிப்பித்தோர் என, பன்முக நோக்கில் இடம் பெற்றுள்ளன. தமிழறிஞர்கள் பற்றி ஆய்வு செய்வோருக்கு பார்வை நுாலாக பயன்படுத்த உகந்த வகையில் உள்ளது. – மதி




