/ வாழ்க்கை வரலாறு / தமிழ்நாட்டுப் பாளையக்காரர் செப்பேடுகள்
தமிழ்நாட்டுப் பாளையக்காரர் செப்பேடுகள்
வரலாற்றுக்கு முக்கிய ஆதாரமாக திகழ்வது கல்வெட்டு மற்றும் செப்பேடுகள். தமிழகத்தில் பாளையம் என்ற நிர்வாக அமைப்பில் எழுதப்பட்ட, செப்பேடுகளை படி எடுத்து தொகுத்துள்ள நுால். வரலாற்றில் பல அரிய செய்திகள் இவற்றில் உள்ளன.மொத்தம், 42 செப்பேடுகள் படி எடுத்து பதிப்பிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகளில் உள்ள வரிவடிவம் மாறாது சிறப்பாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், நடைமுறைகள் எல்லாம் தெளிவாக உள்ளன. மிகவும் கடினமாக உழைத்து கவனமாக பதிப்பிக்கப்பட்டுள்ள வரலாற்று ஆவண நுால்.