/ கட்டுரைகள் / தமிழ்த் திருமணம் நிகழ்த்து முறை
தமிழ்த் திருமணம் நிகழ்த்து முறை
தமிழர் திருமண சடங்கு நடைமுறை குறித்த விபரங்களை தெளிவுபடுத்தும் நுால். திருமணத்தை நடத்தி வைப்பவர், வணிக நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்கிறது. நடத்தி வைப்பவருக்கு தகுதியான ஊதியம் வழங்க வலியுறுத்துகிறது. திருமண நிகழ்வுக்கு திருவிளக்கு ஏற்றும் முறையை முன் வைக்கிறது. மங்கல வாழ்த்து, அதைத் தொடர்ந்து போற்றிப் பாடல் பாடக் கூறுகிறது. அரசாணிக்கால், குலதெய்வம், நீர் வழிபாடு குறித்து அறிய தருகிறது. காப்பு கட்டுதல், அம்மையப்பன், ஒன்பது கோள் வழிபாடு, செந்தீ என்ற வேள்வி வழிபாடு, நீர் வார்த்து வழங்குதல், தாலி என்ற மங்கல நாண் அணிவித்தல் என நடைமுறை விபரம் தரும் நுால். – முகிலை ராசபாண்டியன்




