/ வரலாறு / தமிழக முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்

₹ 450

இஸ்லாமிய பண்பாட்டு தகவல்களை தொகுத்து வழங்கியுள்ள நுால். தமிழகத்தில் நுழைந்த வரலாறு, சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், படிப்படியான பண்பாட்டு வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சியில் பங்கேற்பு, உருது மொழியின் வரவால் ஏற்பட்ட மாற்றங்கள் என சான்றுகளோடு முன்வைக்கிறது. கீழக்கரை துறைமுக வணிகம், அரேபிய இஸ்லாமிய குடியேற்றம், புழக்கத்தில் இருந்த அரேபிய நாணயங்கள், சுல்தான் ஆட்சி, தெலுங்கர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் இஸ்லாமியர் நிலைப்பாடு போன்றவை தமிழர் வரலாற்றோடு பொருத்திப் பார்க்க உதவுகின்றன. வரலாற்று ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


புதிய வீடியோ