/ ஆன்மிகம் / தமிழகம் தந்த மகான்கள்
தமிழகம் தந்த மகான்கள்
தமிழகத்தில் பிறந்த மகான்கள் வரலாற்றை தொகுத்து தரும் நுால். அன்றைய அருணகிரிநாதர் முதல், இன்று நம் கண் முன் வாழ்ந்த கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் வரலாறு வரை, 15 மகான்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. வாரியார் எந்த வயதில் சொற்பொழிவாற்றத் துவங்கினார், 14 மொழிகளில் புலமை பெற்ற மகா பெரியவர்; பூதங்களையும், தேவதைகளையும் சாப்பிட வைத்த மகான்; பக்தனின் காலில் முள் குத்தியது கண்டு பொறுக்காத முருகப்பெருமான் பாதக்குறடு என்ற காலணி பரிசாகக் கொடுத்த பெருமை மிக்க வரலாறுகளை படிக்கும் போது உடல் புல்லரிக்கிறது.எளிய நடையில் உள்ளது. படிப்போர், மகான்களின் பெருமை உணர்ந்து நடப்பர் என்பது உறுதி.– தி.செல்லப்பா