/ தமிழ்மொழி / தமிழகத்துக்கு அப்பால் தமிழ்
தமிழகத்துக்கு அப்பால் தமிழ்
புலம்பெயர்ந்து அயல் நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் நுால். இந்த புத்தகம், 14 பேரின் படைப்புலகத்தையும், வாழ்வையும் அறிய தருகிறது. ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும் வகையில் வாழ்க்கை குறிப்பு உரிய வகையில் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, எழுத்தாளருடன் அமைந்த பேட்டி, கேள்வி – பதில் வடிவில் தொகுத்து தரப்பட்டுள்ளது. புத்தகத்தின் இறுதியில் எழுத்தாளர்களின் ஒரு படைப்பு இடம் பெற்றுள்ளது. அயல்நாடுகளில் வாழும் எழுத்தாளர்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், புதிய பகுதியில் செயல்படும் முறைகளை அறிய உதவும் நுால். – மதி