/ கதைகள் / டயபாலிக் ஆக் ஷன் ஸ்பெஷல்

₹ 320

இத்தாலிய மொழியில் ஆடம் ஒயில்டு எழுதிய இரண்டு கதைகளின் தமிழாக்கமாக மலர்ந்துள்ள படக்கதை நுால். முழுக்க முழுக்க படங்களால் கதைகள் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கின்றன. திகில், பரபரப்பு, ஆக் ஷன், திருட்டு, ஆள் கடத்தல் என்ற வகையில் இரண்டுமே வித்தியாசமாக பின்னப்பட்டு இருக்கின்றன. போதைப்பொருள் கடத்தலில் பெரும்பணம் சேர்க்க முடியும் என்றும், அதை அதிகாரிகள் நினைத்தால் முறியடிக்கலாம் என்றும் போதிக்கிறது. திருட்டுத்தனமாக சொத்துக்கள் எத்தனை சேர்த்தாலும், அதே கூட்டத்துக்குள் இருக்கும் ஒருவன் காட்டிக் கொடுத்தால் மிஞ்சுவது என்ன என்று யோசிக்க எடுத்துச் சொல்கிறது. ஆள் மாறாட்டம் பற்றி பேசினாலும் இரண்டு கதைகளும் வித்தியாசமாக உள்ளன. திகில் உணர்வு தரும் நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை