/ மாணவருக்காக / மாணவ மாணவியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து முக்கிய விஷயங்கள்!
மாணவ மாணவியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து முக்கிய விஷயங்கள்!
இளைஞர்கள் திறன் மேம்பட்டு தேசம் உயர்வடைய வேண்டும் என்ற வேட்கையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். மாணவர்கள் தெளிவான நோக்கமும், நல்ல பழக்கங் களை கடைப்பிடிக்கும் முறையையும் கற்றுக்கொடுக்கும் வகையில் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. வெற்றிக்கான நான்கு விதிகளை செயல்களாக திட்டமிட்டு பழக்கமாக்கிக் கொள்வது பற்றி அறிவுரைக்கிறது. முயற்சிப்பது, நோக்கத்தை தெளிவாக அமைத்துக் கொள்வது, மனம் தளராது உழைப்பது என்பதை தக்க உதாரணங்கள் வழியாக கூறி பின்பற்ற வேண்டிய அட்டவணையும் தரப்பட்டுள்ளது. வாழ்வில் வெற்றி அடைய அன்றாட பழக்கங்களை பட்டியலிட்டு காட்டும் நுால். – பின்னலுார் விவேகன்




