/ ஆன்மிகம் / தமிழகக் கோயிற்கலை (தமிழகத் திருக்கோயில்கள் வழிபாட்டு வரலாறு)

₹ 550

தமிழக கோவில்கள், பாரத கலாசாரம், தமிழ்ப் பண்பாட்டின் சங்கமமாகத் திகழ்கின்றன. வேதாகம புராணங்கள், வான சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், நுண் கலைகள், படிமக் கலைகள் மற்றும் இயல், இசை, நாடகத் தமிழ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒரு வெளிப்பாடே கோவிற்கலை. இதன் ஆதாரம் கடவுள் வழிபாடு. கடவுள் வழிபாட்டின் தோற்றம், வளர்ச்சி மற்றும் இன்றைய வாழ்வு நிலை பற்றி எடுத்துக் கூறும் அரிய முயற்சியாக மலர்ந்துள்ளது இந்த நுால். கோயிற்கலையின் பொதுக்கூறுகளும், சைவ, வைணவ சமயக் கூறுகளும் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளன. கோவில்கள் பற்றி ஆய்வு நிகழ்த்தும் ஆய்வாளர்கள், தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத் துறையில் பணி வாய்ப்பு பெறத் தேர்வு எழுதுவோர், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுவோர், கோவில் அலுவலர்கள் மற்றும் பக்தர்களுக்கு மிகவும் உதவும். பொதுவான செய்திகளை வேண்டிய அளவு அறிந்து கொள்ள உதவும் நடைமுறை நுால்.– இளங்கோவன்


முக்கிய வீடியோ