/ புத்தக மதிப்புரை / தமிழகத்தில் சமூகநீதிப் போராளிகள்
தமிழகத்தில் சமூகநீதிப் போராளிகள்
தமிழகத்தில் சமூக உயர்வுக்கு பாடுபட்டோரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நுால். தமிழக உயர்வுக்காக போராடியோரின் மறைக்கப்பட்ட வரலாறாக, 22 தியாகிகள் வாழ்க்கைக் குறிப்புகள் கால வரிசைப்படி தரப்பட்டுள்ளன. போராடியோர் வாழ்வில் நிகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றில் விடுபட்ட தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. போராட்டங்கள், சந்தித்த வழக்குகள், தலைவர்களுடன் இருந்த தொடர்புகள், எழுதிய நுால்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதுவரை அறிமுகமில்லாது பெயர் மட்டுமே தெரிந்த விடுதலை போராட்ட தியாகிகள் பற்றியும் அறிய முடிகிறது. போட்டித் தேர்வில் கலந்து கொள்வோருக்கு பயன்படும் நுால். – வி.ராமலிங்கம்




