/ புத்தக மதிப்புரை / தந்தையர் நாடு

₹ 100

உழைப்பால் உயர்ந்த பெருமக்களின் வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தை தரும் நுால். மும்பையில் 2 ரூபாயில் சுயதொழில் துவங்கி, வாழ்வில் உயர்ந்த லட்சுமி ரமணாவின் வாழ்க்கை செய்திகள் நம்பிக்கை ஊட்டும் வகையில் பதிவாகியுள்ளன. புதுக்கோட்டையில் அச்சகம் துவங்கி, சிறுவர் இலக்கியம் வளர பாடுபட்ட கண்ணபிரான் பாசுரம் குறித்த தகவல்கள் வியப்பு தரும் வகையில் உள்ளன. அரசு பணியில் இருந்தபடி, பத்திரிகை துறையிலும் சிறப்புற்று விளங்கிய கே.ஆர்.வாசுதேவன் பக்தி இலக்கியத்துக்கு செய்த அரிய சேவைகள் குறித்த விபரம் பதிவாகியுள்ளது. உழைப்புடன், உதவும் பண்பையும் கொண்டிருந்த கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பற்றி சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உழைப்பால் உயர்ந்த பெருமக்களின் சிறப்பு குறித்த நுால். – மதி


சமீபத்திய செய்தி