/ வாழ்க்கை வரலாறு / தங்க மகன்
தங்க மகன்
தங்கநகை வணிகம் குறித்து தகவல்கள் நிறைந்துள்ள நுால். ஒரு வியாபார நிறுவனம் வளர்ந்த விதத்தை நேர்த்தியாக தருகிறது. விற்பனையகத்தை நிறுவியவரின் வாழ்க்கை வரலாறாக மலர்ந்துள்ளது. போட்டி மிகுந்த தங்க நகை விற்பனை வணிகத்தை பன்னாட்டு அளவில் கட்டமைத்துள்ள விதம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நகை விற்பனையை தனித்த அடையாளத்துடன் உருவாக்க எடுத்த முயற்சிகளையும், உத்திகளையும் அதன் பின்னால் உள்ள உழைப்பையும் தெளிவாக காட்டுகிறது. பிராண்ட் உருவாக்கத்தில் விடா முயற்சி, ஒருமுகப்படுத்தும் சிந்தனையின் சிறப்பு, நிறுவனத்தை கட்டமைத்தது என வழிகாட்டுதல்கள் நிறைந்துள்ளன. புகழ்பெற்ற தங்கநகை விற்பனை நிறுவனம் உருவான பின்னணியுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்று நுால். – ஒளி