/ தமிழ்மொழி / தஞ்சை மண்ணின் தமிழ் சான்றோர்கள்

₹ 170

தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட தஞ்சை பிரமுகர்கள் பற்றிய விபரங்களை தரும் நுால். கவிஞர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, தஞ்சை ராமையாதாஸ் பற்றி கூறுகிறது. கர்நாடக இசை கலைஞர்கள் பாபநாசம் சிவன், சீர்காழி கோவிந்தராஜன், பழந்தமிழ் ஏடுகளை திரட்டிய உ.வே.சா., எழுத்து மன்னன் கல்கி செயல்பாடுகள் படிக்க சுவை ஊட்டுகின்றன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 14ம் வயதில் எழுதிய, ‘துாண்டில்காரன் வரும் நேரம் ஆச்சு; ரொம்ப துள்ளி குதிக்காதே கெண்டை குஞ்சே...’ என்ற ஓசை நயத்தில் கருத்தாளத்தை அலசுகிறது. பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமன் வாழ்க்கை வரலாறும் சுவையுடன் படைக்கப்பட்டுள்ளது. தமிழுக்காக வாழ்ந்தோரை பெருமைப்படுத்தும் நுால். – சீத்தலைச்சாத்தன்


புதிய வீடியோ